Monday, September 13, 2010

அமெரிக்காவைக் கலக்கிய இந்தோ-பாக் எக்ஸ்பிரஸ்!


இந்தோ-பாக் எக்ஸ்பிரஸ்... ரோகன் போபண்ணா, அய்சம் உல் குரேசி இணையை டென்னிஸ் ரசிகர்கள் இப்போது செல்லமாக இப்படித்தான் அழைக்கிறார்கள். வெள்ளியன்று நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரர்களான அமெரிக்க இரட்டையர்கள் பாப் பிரையன் மற்றும் மைக் பிரையன் ஆகியோரிடம் போராடி வீழ்ந்த இவர்களுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளதாக விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tuesday, July 27, 2010

பழங்குடியின மொழிகளுக்கு புத்துயிர்!


ஆந்திர மாநிலப் பகுதியில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழும் சில பழங்குடி இன மக்கள் பேசும் மொழிகளுக்கான வரி வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மொழியின் ஒலியமைப்புக்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ள இந்த எழுத்துக்களை உருவாக்கியவர் ஆந்திர பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் பிரசன்ன ஸ்ரீ என்பவர். கடந்த 19 ஆண்டுகளாக முயன்று அவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்தைக் கண்டுபிடித்ததுதான் மனித குலத்தின் நாகரிக வாழ்வைத் துவக்கி வைத்தது என்பது மானுடவியல் அறிஞர்கள் கூற்று. அந்த வகையில் இப்பழங்குடி மக்கள் அவர்களுக்குச் சொந்தமான நாகரிகத்தை உருவாக்கிக் கொள்ள பேராசிரியர் பிரசன்ன ஸ்ரீ வாய்ப்பளித்துள்ளார் என்று கூறலாம்.

Saturday, July 10, 2010

நம்பிக்கை துரோகம் நடக்காமல் இருக்கட்டும்!



1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 14 ம் தேதி நள்ளிரவில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய சுதந்திர நாள் உரை. இந்த உரையைத் தமிழில் பல அறிஞர்கள் மொழிபெயர்த்துள்ளனர். இது இளைஞர் முழக்கம் இதழுக்காக நான் செய்த மொழிபெயர்ப்பு. நேருவின் வழி வந்ததாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் காங்கிர° கட்சியின் தலைமையிலான மன்மோகன் சிங் அரசு எப்போதோ அவரது கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டது. போபால் படுகொலையில் மேற்கொண்டுள்ள அணுகுமுறை, பெட்ரோலியப் பொருட்களின் விலையைத் தாறுமாறாக உயர்த்தியது போன்றவை அதன் அண்மைக்கால சாதனைகள். இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவை ஆளப்போகும் அரசு எப்படி இருக்க வேண்டும் என்று அன்று ஜவஹர்லால் நேரு கண்ட கனவு இதோ:

Saturday, June 12, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே!


மக்களின் அடிப்படை வாழ்க்கையோடு எந்தவித சம்பந்தமும் இல்லாத மெகா சீரியல்கள், மாயாஜால பேய்க்கதைகள், நிஜம் என்ற பெயரில் அவிழ்த்து விடப்படும் பொய்கள், நடிக,நடிகைகளின் அருவெறுக்கத்தக்க நடனங்கள் என்று ‘மக்களின் ரசனை’ என்ற போர்வையில் இன்றைய காட்சி ஊடகங்கள் கல்லாப்பெட்டியை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. அதற்கு விதிவிலக்காக, சமூகப் பொறுப்புணர்வுடனும் ஊடகங்கள் செயல்பட முடியும் என்பதற்குச் சான்றாக உள்ள, விரல்விட்டு எண்ணக்கூடிய சில நிகழ்ச்சிகளில் விஜய் தொலைக்காட்சியின் நீயா... நானா? நிகழ்ச்சியும் ஒன்று.

Saturday, April 17, 2010

வாலு போச்சு; மூளை வந்தது!


எலியின் வாலில் உள்ள இணைப்புத் திசுக்களில் இருந்து நேரடியாக, செயல்படும் மூளை செல்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி மரியஸ் வெர்னிக் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு இச்சாதனையைப் புரிந்துள்ளது. பொதுவாக இத்தகைய செல்களை உருவாக்க மிக நீண்டதும், களைப்பு ஏற்படுத்துவதுமான வழிமுறைகளை விஞ்ஞானிகள் கையாண்டு வருகின்றனர். முதலில் திசுக்கள் செயல்படும் பல்வகை ஆற்றல் கொண்ட செல்களாக (Active Pluripotent Cells) மாற்றப்படும். அதன் பிறகு இவை நரம்பு செல்களாக (நியூரான்கள்) மாற்றப்படும். பல நேரங்களில் இந்த வழிமுறைகள் எந்த விதப் பலனையும் ஏற்படுத்தாமல் போவதும் உண்டு. இந்நிலையில்தான் தற்போது புதிய அதிவேக முறை கண்டறியப்பட்டுள்ளது. இம்முறையில் விஞ்ஞானிகள் குழு எலியின் வாலில் உள்ள சில வகை இணைப்புத் திசுக்களை நேரடியாக வளரும் செல்களுக்குள் செலுத்தியது. இதையடுத்து அந்தச் செல்கள் நேரடியாக நியூரான்களாக மாற்றப்பட்டன. இம்முறை அதிவேகமானது மட்டுமல்லாமல் எதிர்பார்த்த பலன்களை விரைவில் தருவதாகவும் உள்ளது என்று விஞ்ஞானி வெர்னிக் கூறுகிறார். இவ்வாறு உருவாக்கப்பட்ட செல்கள் நரம்பு செல்களைப் போன்று மற்ற செல்களிடம் இருந்து சைகைகளைப் பெறவும், சைகைகளை அனுப்பவும் செய்கின்றன என்கிறார் அவர்.
இந்த தனித்தனி மூளை செல்கள் இணைந்து விரைவில் எலியின் மூளையாக மாறும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். தீவிரமாக அச்செல்களைக் கண்காணித்து வருகின்றனர். அவ்வாறு மாறினால் அது மருத்துவ உலகிற்குப் பெரும் நன்மையைத் தருவதாக இருக்கும். பார்க்கின்சன் நோய் போன்றவற்றையும், சில வகை நரம்புக் கோளாறுகளையும் சரிசெய்ய இயலும். மன நல மருத்துவத்திலும் இது பெரிதும் பயன்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.