சோசலிசப்பாதையில் பீடுநடை!
உலகின் மிகப்பெரிய பன்னாட்டு காகித ஆலைகளுள் ஒன்று அது. ஸ்மர்ஃபிட் கப்பா குரூப்ஸ் என்ற பெயரைக் கொண்ட அந்நிறுவனத்திற்கு வெனிசுலாவின் போர்ச்சுகீசா மற்றும் லாரா மாகாணத்தின் மத்தியப் பகுதியில் மிகப்பெரிய தைல மரத்தோட்டம் ஒன்று கடந்த வாரம் வரை இருந்தது. ஆம் கடந்த வாரம் வரை தான். இந்த வாரம் அது வெனிசுலா அரசுக்குச் சொந்தமாகிவிட்டது. நாடு முழுவதும் தற்போது மேற்கொண்டு வரும் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வெனிசுலா அரசு இந்த தைல மரத்தோட்டத்தைத் தன் வயப்படுத்தியுள்ளது. "லாரா மற்றும் போர்ச்சுகீசா மாகாணத்தில் இருந்த மிகப்பெரிய அந்த தைல மரத்தோட்டம் பெருமளவில் நீரை உறிஞ்சி விடுகிறது. இதனால் அங்குள்ள பல நதிகள் நீரை இழந்து வருகின்றன," என்று கூறிய வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ், இத்தோட்டத்தில் உள்ள மரங்களை அழித்து வேறு உபயோகமான வழிகளில் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்றார். மேலும் அவ்வாறு அம்மரங்களை அழித்த பின் புதிய பயிர்களை அவ்விடத்தில் விளைவிக்கப்போவதாகவும் கூறினார். ஆம். வெனிசுலாவில் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளுடன் சேர்ந்து விவசாயத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன. "உண்மையில், நிலச்சீர்திருத்தம் செய்வது தற்போதுள்ள விவசாய அமைப்பையும், நடைமுறைகளையும் மாற்றவே!" என்று வெனிசுலாவின் தேசிய நில நிறுவனத்தின் (ஏநnஉணரநடய'ள சூயவiடியேட ஐளேவவைரவந டிக டயனேள) தலைவர் யான் கார்லோஸ் லோயோ தெரிவித்தார். "விவசாயத்தை சிறுபான்மையினரான தனியாரின் கைகளிலிருந்து பிடுங்கி சமுதாயத்தின் சொத்தாக மாற்றுவது அவசியம். விவசாயம் வெனிசுலா மக்களின் சொத்து, அதாவது பொதுவுடைமை!" என்று முழங்குகிறார் அவர். அவர் தலைமையிலான ஐஎன்டிஐ மற்றும் தேசிய பாதுகாப்புப்படை வீரர்கள் கடந்த திங்களன்று பாரினாஸ் மாகாணத்தில் 2800 ஹெக்டேர் அளவிலான (6 ஆயிரத்து 916 ஏக்கர்) தனியார் நிலங்களைக் கைப்பற்றி அரசுடைமையாக்கியுள்ளனர். இதுவரை அங்கு 5 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான (12,350 ஏக்கர்) நிலங்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களைக் கைப்பற்றுவது குறித்தும் வெனிசுலா அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. டகாரிகா பள்ளத்தாக்(கூயஉயசபையே எயடடநல) பகுதியில் உள்ள சுமார் 7 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களை அரசுடைமையாக்குவது குறித்து அந்நாட்டின் விவசாயம் மற்றும் நில வளத்துறை அமைச்சர் எலியாஸ் ஜாவா மற்றும் ஆராகுவா மாநில ஆளுனர் ரபேல் ஐசியா ஆகியோர் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இங்குள்ள நிலம் நல்ல வளமான நிலம் என்றும், ஆனால் பயன்படுத்தப்படாமல் வீணாகக் கிடப்பதாகவும் எலியாஸ் ஜாவா கூறினார். விவசாய கூட்டுப்பண்ணைகளை அமைத்து மண்ணுக்கேற்ற பயிர்களைப் பயிரிடுவது சுற்றுச்சுழலுக்கேற்ற நகரமைப்புத்திட்டங்களை மேற்கொள்வது ஆகியவை அரசின் திட்டங்களாக உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார். ஆளுனர் ஐசியா இது குறித்து கூறுகையில் சோசலிசப் பாதையில் விவசாயத்தை திருப்புவதே அரசின் நோக்கம் என்றார். உணவு உற்பத்தி மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் என்ற ஒரு அரசு நிறுவனத்தை அமைப்பதே வெனிசுலா அரசின் தற்போதைய திட்டமாகும். அரசுடைமையாக்கப்பட்ட நிலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்ததாகவே இந்த மையத்தின் செயல்பாடு இருக்கும். விவசாய உற்பத்தியை உள்ளூர் சமூகத்தின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுறவு அமைப்பு நிர்வகிக்கும். இந்த கூட்டுப்பண்ணைகள் திட்டம் விவசாயத்தை சோசலிசப் பாதையில் திருப்புவதில் முக்கிய பங்காற்றுவதாகும். நிலத்தை ஏகபோக தனியார் முதலாளிகளிடமிருந்து பிடுங்கும் போது சாவேஸ் அரசு எவ்வித எதிர்ப்புகளையும் பொருட்படுத்துவதில்லை. ஐ.என்.டி.சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தை அணுகப்போவதாக மிகப்பெரிய எஸ்டேட் ஒன்றின் உரிமையாளரான டோபியாஸ் காரேரோ நகார் என்பவர் கூறியுள்ளார். ஆனால் அரசு சட்டப்படியான நடவடிக்கைதான் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2001ம் ஆண்டின் நிலச்சட்டம் மற்றும் 2008ம் ஆண்டில் போடப்பட்ட உணவுப்பாதுகாப்பு மற்றும் இறையாண்மை சட்டம் ஆகியவை மிகப்பெரிய எஸ்டேட்கள் மற்றும் நிலங்கள் சமூக நலனுக்கு எதிரானது என்று வரையறுக்கின்றன. மேலும் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தேவை ஏற்படும் போது அரசு தலையிடலாம் என்றும் அவை கூறுகின்றன. இதைக் கோடிட்டுக் காட்டிய ஐ.என்.டி.ஐயின் தலைவர் லோயோ அரசு தன் கடமையைத்தான் செய்துள்ளது என்று கூறினார். தற்போது லாரா மற்றும் போர்ச்சுகீசா மாகாணங்களில் மேலும் 12 பெரிய எஸ்டேட்களை அரசுடைமையாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. 2001ம் ஆண்டில் நிலச்சட்டம் அமலாக்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை 60 ஆயிரம் ஹெக்டேர் நிலம் (1 லட்சத்து 48 ஆயிரத்து 200 ஏக்கர்) வெனிசுலாவின் யாராகுய் மாகாணத்தில் மட்டும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment