Thursday, December 18, 2008

வேகமாக..... வெகு வேகமாக...

வே.ரோகிணி

டிகர் பிரபு தேவாவின் மகன் விஷால்-13 வயது. ஃபாஸ்ட் புட் தொடர்ந்து சாப்பிட்டதால் தான் மரணமுற்றார் என்பது சமீபத்திய அதிர்ச்சி செய்தி. உணவு உயிர்வாழத்தான். அது மனித குலத்தை அழிக்கும்-உயிரைப் பறிக்கும் பொருளாக மாறிவிட்டால் இந்தப் போக்கை நாம் என்னவென்று சொல்வது? பிரபுதேவா ஒரு நடிகராக-பிரபலமானவராக இருப்பதால் அவர் மகனின் மரணத்திற்கான காரணம் பாஸ்ட் புட் தான் என்ற செய்தி `ஃபாஸ்ட் புட்'டை விட வேகமான வேகத்தில் பரவி விட்டது. அப்படியானால் வெளியிலேயே வராத பிரபு தேவா மகன்களின் மரணங்கள் எத்தனையோ? இந்த நேரத்தில் `பாஸ்ட் புட்` அபாயத்தை கொஞ்சமேனும் அறிந்து கொள்வது நல்லது.
பாஸ்ட் புட் என்பதை அதி வேக உணவு வகை என்று சொல்லலாம். நாம் பாரம்பரியமாக தயாரிக்கும் உணவு வகைகளை விட மிகக்குறைவான நேரத்தில் அதை விட கூடுதலான சுவை மற்றும் வண்ண கவர்ச்சியில் (உணவு அழகுபடுத்துதல்-ஈர்த்தல்) கொடுப்பதற்காக `அஜினமோட்டோ போன்ற வேதிப்பொருட்களை சேர்த்து தயாரிக்கும் உணவு வகைகளைத்தான் `பாஸ்ட் புட்' என்கிறார்கள். நாம் சாப்பிடும் `பிரைடு ரைஸ்' முதற்கொண்டு, சில்லி சிக்கன்-ஜிஞ்சர் சிக்கன், `ஸ்லைஸ்' எனப்படும் மிக மெலிதான வற்றல் சிப்ஸ் எல்லாம் இவ்வகையை சேர்ந்தவை தான். ஒவ்வொரு உணவுக்கும் ஒவ்வொரு விதமான வண்ணம் செறிவூட்டப்பட்டு (எல்லாமே வேதியியல் பொருட்கள் மூலம் தான்) யாரையும் கவரக் கூடிய வண்ணம் இந்த உணவு தயாரிக்கப்பட்டிருக்கும். குறிப்பாக இது சிறுவர்களை ரொம்பவுமே கவர்ந்திழுக்கக் கூடியது. இதை சிறு வயது முதல் விரும்பி சாப்பிட்டுத்தான் பிரபுதேவா மகன் விஷால் வெறும் 13-வயதில் புற்றுநோய் தாக்கி மரணத்தை தழுவியிருக்கிறான்.
இந்த உடல் நலத்தை கெடுக்க கூடிய உணவு தேவை தானா? இப்ப ருசிக்க சாப்பிடுவதும் நாம் தான், பிறகு துன்பப்படுவதும் நாம் தானே!
இந்த அந்நிய உணவுகளின் ஆதிக்கம் மக்களிடையே தலை விரித்து ஆடுகிறது என்று தான் சொல்லியாக வேண்டும். மக்கள் தற்போது உணவை விட உணவில் கலக்கப்படும் நிறத்திற்குத்தான் மதிப்பு கொடுக்கிறார்கள். இதனை குழந்தைகள் தான் விரும்புகிறார்கள் என்று பார்த்தால், பெரியவர்களும் கூட இதைத்தான் வாங்கி ருசிக்கின்றனர். ஆனால், இதில் ஏற்படும் விபரீதத்தை அறியாமலேயே வியாபாரிகள் மக்களின் மனதிற்கேற்ப நிறத்தை அதிகரித்து வியாபாரம் செய்கின்றனர்.
ஃபாஸ்ட் புட் உணவில் செயற்கை நிறங்களை அளவுக்கு அதிகமாக கலக்கின்றனர். இது மட்டுமில்லை. சூடான்டை, மெட்டானில் இது போன்ற கெமிக்கல்களை இணைத்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். ஆனால், இன்றோ சிக்கன் 65 போன்ற உணவுப்பொருட்களுடன் தாராளமாகச் சேர்த்து விடுகின்றனர். இதனை சேர்ப்பதால் நிறம் என்னவோ பளிச்சென்று தான் தெரியும். ரசிக்கவும் தூண்டும். அதன் பின்னர் ருசிக்கவும் நம்மை ஆட்படுத்தும். இத்தூண்டுதல் நம் மனதில் எழுமானால் நம் நோய்க்கு நாமே அச்சாணியிட்டது போல் ஆகிவிடாதா? அது மட்டுமா? இதை சாப்பிடுவதால் குடல் கேன்சர், சீறு நீரகக் கோளாறு, மற்றும் மரபணுக்களில் கோளாறு என பல கொடிய நோய்களை நாமே விருந்துன்ன அழைத்தது போல் ஆகி விடாதா...?
இது மட்டுமா? சாண்ட்விச்களில் எவ்வளவு கலோரி இருக்கிறது. எந்தளவு கொழுப்பு உட்கொள்கிறோம் என்று அறியாமலேயே பலர் அதனை உண்டு பின்னால் உடல் பருமனுக்கு ஆளாகிறார்கள். பாஸ்ட் புட் உணவுகளின் மிக முக்கிய எதிர் விளைவு உடல் பருமனை ஏற்படுத்துவதே. வேதிப்பொருட்களை இவ்வகைப் பொருட்களில்தான் கலப்பது என்றில்லை. பஜ்ஜி, வடை, பிரியாணி, ஃப்ரைடு ரைஸ் என்று எல்லாவற்றிலும் கலர் பவுடர், மற்றும் `எசன்ஸ்' எல்லாம் சேர்க்கிறார்கள்.
அது மட்டுமா? சிலர் உணவில் சுவை கூட்டவும், மணமூட்டவும் `அஜினமோட்டோ'வை கலக்குகிறார்கள். கடைகளில் மட்டுமல்ல. வீடுகளிலும் கூட பயன்படுத்துவதுதான் கொடுமை. இதனால் ருசியைத்தவிர வேறு எந்த விதமான நள்மையுமில்லை. ஆனால், கேன்சர் மாதிரியான பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ப்ளாஸ்டிக் கவரில் வைத்துச் சாப்பிடுவதாலும் கூட கேன்சர் போன்ற பாதிப்புகள் வர வாய்ப்பிருக்கிறது. எல்லா பொருட்களிலுமே கலப்படம் வந்து விட்டது.
பார்த்துப் பார்த்து வாங்கி சமைக்கும் உணவுகளிலேயே பாதிப்புகள் இருக்கின்றன. இதிலே கடையில் வாங்குவது எப்படி இருக்கும். கடைகளில் சுவை கூட்டவும், மணமூட்டவும் பல வேதிப் பொருள்கள் கலக்கப்படுகின்றன. மசாலா மற்றும் கலர் பவுடர்கள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும். இது சாப்பிடுவதால் உடலில் உள்ள குடலை அரிக்க ஆரம்பித்து விடும். இந்த எண்ணெய் மசாலாக்களை நம் உணவில் அதிகமாக சேர்த்தால் கேன்சர், உணவுக்குழாய் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இது மட்டுமா, தற்போது சாலையோர கடைகளில் மாமிசம் சுவையாக இருப்பதற்காகவும், மாமிசம் நன்றாக வேக வேண்டும் என்பதற்காகவும் `பாராசிட்டமல்' மாத்திரையை கலக்கிறார்கள் என்ற செய்திகள் கூட வந்தது. இது, வியப்பிற்குரிய ஒன்றாகவும் இருக்கிறது. இவற்றை உணவில் கலப்பதன் மூலம் தலைவலி, உடல் வலி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.
பாஸ்ட் புட் உணவுகளை உண்பது நாம், மரணத்தையும் வேகமாக அழைப்பது போலாகி விடும். இந்த உணவுகள் தேவை தானா....?

No comments:

Post a Comment