Friday, December 12, 2008

தெரியாதா உனக்கு?

கடவுளின் கைபேசி இப்போது உபயோகத்தில் இல்லை;

இமெயிலும் செய்வதில்லை!
 
அவரது 4048ம் பிறந்தநாளுக்கு, 
நான் அனுப்பிய வாழ்த்து அட்டையும் திரும்பி வந்துவிட்டது.

என்ன ஆகிவிட்டது அவருக்கு?

யோசனையில் ஆழ்ந்தவனாக அவரது நண்பரை அழைத்தேன்.

"தெரியாதா உனக்கு?"

அவர் கூறிய தகவல் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
ஈராக்கில் கடவுளின் வீடு இருந்த பகுதியில்
அமெரிக்கப்படை குண்டுவீசியதில்.......,

அவரும்......!

No comments:

Post a Comment