Tuesday, July 27, 2010

பழங்குடியின மொழிகளுக்கு புத்துயிர்!


ஆந்திர மாநிலப் பகுதியில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழும் சில பழங்குடி இன மக்கள் பேசும் மொழிகளுக்கான வரி வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மொழியின் ஒலியமைப்புக்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ள இந்த எழுத்துக்களை உருவாக்கியவர் ஆந்திர பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் பிரசன்ன ஸ்ரீ என்பவர். கடந்த 19 ஆண்டுகளாக முயன்று அவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்தைக் கண்டுபிடித்ததுதான் மனித குலத்தின் நாகரிக வாழ்வைத் துவக்கி வைத்தது என்பது மானுடவியல் அறிஞர்கள் கூற்று. அந்த வகையில் இப்பழங்குடி மக்கள் அவர்களுக்குச் சொந்தமான நாகரிகத்தை உருவாக்கிக் கொள்ள பேராசிரியர் பிரசன்ன ஸ்ரீ வாய்ப்பளித்துள்ளார் என்று கூறலாம்.

Saturday, July 10, 2010

நம்பிக்கை துரோகம் நடக்காமல் இருக்கட்டும்!



1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 14 ம் தேதி நள்ளிரவில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய சுதந்திர நாள் உரை. இந்த உரையைத் தமிழில் பல அறிஞர்கள் மொழிபெயர்த்துள்ளனர். இது இளைஞர் முழக்கம் இதழுக்காக நான் செய்த மொழிபெயர்ப்பு. நேருவின் வழி வந்ததாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் காங்கிர° கட்சியின் தலைமையிலான மன்மோகன் சிங் அரசு எப்போதோ அவரது கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டது. போபால் படுகொலையில் மேற்கொண்டுள்ள அணுகுமுறை, பெட்ரோலியப் பொருட்களின் விலையைத் தாறுமாறாக உயர்த்தியது போன்றவை அதன் அண்மைக்கால சாதனைகள். இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவை ஆளப்போகும் அரசு எப்படி இருக்க வேண்டும் என்று அன்று ஜவஹர்லால் நேரு கண்ட கனவு இதோ: